மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊழல் வழக்கில் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை

ஜோதிபிரியா மாலிக் கைதுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊழல் வழக்கில் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஜோதிபிரியா மாலிக், முன்பு உணவுத்துறை மந்திரியாக இருந்த சமயத்தில் ரேஷன் பொருள் வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 14-ந்தேதி தொழில் அதிபர் பாகிபுர் ரகுமான் என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு நெருக்கமாக இருந்த மந்திரி ஜோதிபிரியா வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையைத் தொடர்ந்து மந்திரி ஜோதிபிரியா மாலிக்கிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே ஜோதிபிரியா மாலிக் கைதுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com