

கொல்கத்தா,
பா.ஜனதா தேசிய செயலாளர் ராகுல் சின்கா, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் சூரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
காரியம் முடித்துக் கொடுக்க உங்களிடம் லஞ்சம் வாங்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை நடுரோட்டில் காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட வையுங்கள். ஆனால் அவர்களின் வீடுகளை முற்றுகையிடாதீர்கள். அப்படி செய்தால், அவர்களின் குடும்பத்தார் பாதிக்கப்படுவார்கள்.
அக்டோபர் மாதம் துர்கா பூஜையின்போது, ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு மேற்கு வங்காள மந்திரி பிராத் ஹக்கிம் கூறுகையில், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி விடும் பழைய தந்திரம் இது. சி.பி.ஐ. சம்மனுக்கு பயந்து பா.ஜனதாவில் சேர எல்லோரும் முகுல் ராய் அல்ல என்றார்.