முத்தலாக் தடை மசோதா: மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முத்தலாக் தடை மசோதா: மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Published on

புதுடெல்லி,

முத்தலாக் தடை மசேதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முத்தலாக் மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் நவநீதகிருஷ்ணனும் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர்.

முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:-

முத்தலாக் சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும். முத்தலாக் சட்ட மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என கூறினார்.

இந்த நிலையில் முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் அதிமுகவுக்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com