மும்பையில் இசை சாலையால் ஏற்பட்ட சிக்கல் - அமைதியை சீர்குலைப்பதாக பொதுமக்கள் புகார்

இடைவிடாத இசை, வீடுகளுக்குள் இருக்கும் அமைதியை சீர்குலைக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் இசை சாலையால் ஏற்பட்ட சிக்கல் - அமைதியை சீர்குலைப்பதாக பொதுமக்கள் புகார்
Published on

மும்பை ஒர்லியில் இருந்து நரிமன் பாயிண்ட் வரையில் செல்லும் கடற் கரை சாலையில் வாகன ஓட்டிகளின் சோர்வை தவிர்க்கவும், பாதுகாப் பான வேகத்தை உறுதிப்படுத்தவும் 'ஜெய் ஹோ' பாடல் இசைக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'இசை சாலை' கடந்த மாதம் திறக்கப்பட்டது.

வாகனங்கள் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் செல்லும்போது மட்டுமே இந்த இசை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே இசை சாலை ஜப்பான், ஹங்கேரி, தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த இசை சாலை அமைந்துள்ள பிரீச் கேண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இதிலிருந்து வெளிவரும் சத்தம் தங்களுக்கு பெரும் தொந்தரவாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் பூஷன் கக்ரானியிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில், "அதிகாலை முதல் நள்ளிரவு வரை வாகனங்கள் செல்வதால் ஏற்படும் இடைவிடாத இசை, வீடுகளுக்குள் இருக்கும் அமைதியை சீர்குலைக்கிறது. இந்த தொடர் இரைச்சலால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர், அந்த பகுதியில் ஒலியின் அளவை ஆய்வு செய்ய நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆய்வின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், இசையை நிறுத்துவது அல்லது ஒலித்தடுப்பு சுவர்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com