ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு

ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற டிரம்புக்கு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வந்த டிரம்பை, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.

டிரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு அவரை அழைத்து சென்ற ராம்நாத் கோவிந்த், அங்கு இருந்த 5-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான புத்தர் சிலையையும், மறைந்த மூத்த அரசியல் தலைவர்களின் உருவப்படங்களையும் காண்பித்தார்.

பின்னர் இரு தலைவர்களும் சிறிதுநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் வலிமையான நட்பு நாடு அமெரிக்கா என்று புகழாரம் சூட்டினார்.

பின்னர் பேசிய டிரம்ப், கடந்த 2 நாட்களாக இந்தியாவில் மேற்கொண்ட பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் இந்தியாவை நேசிக்கிறேன். மீண்டும் இந்தியா வருவேன். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எனது பாராட்டுகள். என்று தெரிவித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இதில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, பல மத்திய மந்திரிகள் மற்றும் முதல்-மந்திரிகள் சர்பானந்த சோனாவால் (அசாம்), மனோகர் லால் கத்தார் (அரியானா), எடியூரப்பா (கர்நாடகா) மற்றும் சந்திரசேகரராவ் (தெலுங்கானா), சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, முப்படை தளபதி பிபின் ராவத், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com