வங்காளதேச பெண்ணை பாலியல் வன்கொடுமைக்காக கடத்தியதாக 2 பேர் கைது

வங்காளதேச பெண்ணை பாலியல் வன்கொடுமைக்காக கடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
File image
File image
Published on

மும்பை,

வங்காளதேசத்தை சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கடத்தி சென்று விபசார வியாபாரத்திற்காக ரூ.2 லட்சத்துக்கு விற்றதாக ஒரு பெண் உள்பட 2 பேரை நவி மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் பலாத்கார குற்றச்சாட்டையும் பதிவு செய்துள்ளனர்

பாதிக்கப்பட்ட பெண் வங்காளதேசத்தில் உள்ள குல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று நவி மும்பையில் உள்ள நெருல் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் நிலேஷ் புலே தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வேலை தருவதாக கூறி சில முகவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றியுள்ளனர். இந்தியா வந்த பிறகு ஒரு நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அவரை மும்பையில் உள்ள கிராண்ட் சாலையில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்று அவரை விபசார வியாபாரத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைந்து சென்று மற்ற 2 குற்றவாளிகளுக்கு ரூ.2 லட்சத்திற்கு விற்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நெருலை சேர்ந்த அமீர் ஆசாம் (27) மற்றும் ஷைபாலி ஜஹாங்கீர் முல்லா (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com