கனடாவுக்கு கிளம்பிய அனுமதியில்லாத விமானம்: மீண்டும் டெல்லிக்கே திரும்பியது-பயணிகள் அவதி

சீன வான்வெளியான குன்மிங் பகுதி அருகே சென்ற விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்
கனடாவுக்கு கிளம்பிய அனுமதியில்லாத விமானம்:  மீண்டும் டெல்லிக்கே திரும்பியது-பயணிகள் அவதி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவருக்கு நேற்று முன்தினம் மாலையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் 7 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து சீன வான்வெளியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டெல்லிக்கு திரும்பியது. பயணிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், இந்த சம்பவத்திற்கு விமான நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:

Also Read
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை இன்னும் முடியவில்லை- ஆணையம் தகவல்
image-fallback

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகருக்கு ஏர் இந்தியாவின் ‘ஏ.ஐ.-185’ என்ற விமானம் நேற்று முன்தினம் காலை 11:34 மணிக்கு புறப்பட்டது. கனடாவிற்கு இந்த வகை விமானங்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்நாட்டிற்கு ஏர் இந்தியாவின் ‘போயிங் 777-300 இ.ஆர்.’ வகை விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read
மும்பை- லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
கனடாவுக்கு கிளம்பிய அனுமதியில்லாத விமானம்:  மீண்டும் டெல்லிக்கே திரும்பியது-பயணிகள் அவதி

ஆனால் ‘போயிங் 777-200 எல்.ஆர்.’ வகை விமானம் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த தவறு விமான நிறுவன அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, விமானம் மீண்டும் டெல்லிக்கே திருப்பிவிடப்பட்டது. சீன வான்வெளியான குன்மிங் பகுதி அருகே சென்ற விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com