மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும்-கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

டெல்லியில் மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு உத்தரவிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே வலியுறுத்தியுள்ளார்.
அபிஜீத் திப்கே
Published on

மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தினோம். அதன் விளைவாகவே கல்வி மந்திரி தர்மேந்தி பிரதான் பதவி விலக நேரிட்டது.தற்போது புதிய கல்வி மந்திரியாக நியமிக்கப் பட்டுள்ள பிரகலாத் ஜோஷி மிகவும் விசித்திரமான நபராக இருக்கிறார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை கொண்டு வந்து கல்வி மந்திரியாக்கி நாட்டுக்கு என்ன செய்தி சொல்கிறார்கள்?. பா.ஜனதாவில் ரவுடிகள்தான் நிரம்பியுள்ளனர்.ராம் ரகீம் போன்ற பாலியல் குற்றவாளிகள் இந்த ஆட்சியில் பரோலில் வெளியே வருகிறார்கள். இந்த அரசு ரவுடிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது.

அமித்ஷா ராஜினாமா செய்யவேண்டும்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ராகுல்காந்தியின் அந்த கோரிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கி றேன். அமித்ஷா கண்டிப்பாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கடந்த 20-ந்தேதி தேதி நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு அமித்ஷாவை தவிர வேறு யாரும் உத்தரவிட்டிருக்க முடியாது. எங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக வதந்தி பரப்புகிறார்கள். ஒருவேளை அது உண்மையாக இருந் தால், அது அமித்ஷாவின் தோல்வியையே காட்டுகிறது. வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஒரு இயக்கத்தை கூட கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர் என்ன சாணக்கியர்?.

சதித்திட்டம்

டெல்லி போலீசார் கடந்த 19 மற்றும் 20-ந்தேதிகளில் அதிகாலையிலேயே மாணவர்கள் போராட்டம் நடந்த இடத்திற்கு கற்கள் நிரம்பிய லாரிகளையும், உடைந்த ஒரு வேனையும் கொண்டு வந்து நிறுத்தினர். மாணவர் கள் கல்வீசி வன்முறையில் ஈடுபட்டதாக பழிபோட டெல்லி போலீசாரும், பா.ஜனதா குண்டர்களும் சேர்ந்து போட்ட சதித்திட்டம் இது. நான் அதை நேரில் பார்த்து சமூகவலைத்தளத்திலும் கேள்வி எழுப்பினேன். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய இளைய தலைமுறையினர் நாட்டின் கலாசாரத்தை சீரழித்துவிட்டதாக யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சித்துள்ளார். மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை ஏந்தி, சட்டப்பூர்வமாக எங்கள் உரிமைகளுக்காக போராடுவது கலாசா ரத்தை சீரழிப்பதாகாது. பாபா ராம்தேவ் முதலில் அவரது 'பதஞ்சலி' நிறு வன வியாபாரத்தை கவனிக்கட்டும். சுப்ரீம் கோர்ட்டே அந்த நிறுவனத்தை கடுமையாக எச்சரித்ததை அவர் மறந்துவிடக்கூடாது. இல்லையெனில் வியாபாரம்படுத்துவிடும்” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com