இந்திய-திபெத் எல்லை காவல் படை பெண்கள் குழுவுக்கு மத்திய மந்திரி வாழ்த்து

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி இந்திய-திபெத் எல்லை காவல் படையின் மகளிர் குழு சாதனை படைத்தது.
இந்திய-திபெத் எல்லை காவல் படை பெண்கள் குழுவுக்கு மத்திய மந்திரி வாழ்த்து
Published on

புது டெல்லி,

மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டு இருப்பதாவது:-

மீண்டும் நற்செய்தியில் கத்துவா: உலகின் உச்சியில் வரலாறு படைக்கப்பட்டது!

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிச் சாதனை படைத்த, இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் முதலாவது முழுமையான பெண்கள் கொண்ட மலையேற்ற குழுவிற்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

கத்துவா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இது மிகுந்த பெருமைக்குரிய தருணமாகும்; ஏனெனில், நம் மண்ணின் மைந்தரான, பல்வந்த் சிங்யின் மகள் அஞ்சலி தேவி இந்த வியத்தகு சாதனையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பங்கை ஆற்றியுள்ளார்

பிரதமர் மோடியின் ஊக்கத்துடனும் ஆதரவுடனும், இந்தியாவின் மகள்கள் உலக அரங்கில் இந்தியாவின் பெண் சக்தியை புதிய பரிணாமத்தில் கொண்டு வந்துள்ளனர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com