இந்தியாவின் எரிபொருள் நிலை பற்றி மத்திய மந்திரி ஹர்தீப் சிங் மக்களவையில் இன்று விளக்கம்

சிலிண்டர் பற்றாக்குறையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெருமளவிலான ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை மூடக்கூடிய அபாய சூழல் காணப்படுகிறது.

இந்தியாவின் எரிபொருள் நிலை பற்றி மத்திய மந்திரி ஹர்தீப் சிங் மக்களவையில் இன்று விளக்கம்
Published on

புதுடெல்லி

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. அது முதல் மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால், உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.118 என அதிரடியாக உயர்ந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. சில இடங்களில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Also Read
என்னுடைய கடமையை வெளிப்படையாக, பாகுபாடற்ற முறையில் செய்வேன்: ஓம் பிர்லா

இந்தியாவின் எரிபொருள் நிலை பற்றி மத்திய மந்திரி ஹர்தீப் சிங் மக்களவையில் இன்று விளக்கம்

இந்நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி 2 நாட்களுக்கு முன்பு கூறினார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் பல்வேறு வழிகளில் மற்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து இந்தியாவுக்கான எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்ந்து நடந்து வருகின்றது. இதுபற்றி ஊடகத்தினரிடம் விவாதித்தோம். இந்தியாவில் சி.என்.ஜி. மற்றும் பி..என்.ஜி. ஆகிய வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளது.

அதனால், பயப்பட வேண்டிய தேவையில்லை என கூறினார். போர் சூழலிலும், ஆலைகளுக்கான 70 முதல் 80 சதவீத எரிபொருள் வினியோகம் இருக்கும் என அவர் கூறினார். எனினும், சிலிண்டர் பற்றாக்குறையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட கூடிய அபாய சூழல் காணப்படுகிறது. லட்சக்கணக்கானோர் வேலையிழப்பை சந்திக்க கூடும் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் எரிபொருள் நிலை பற்றி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் மக்களவையில் இன்று விளக்கம் அளிக்க உள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் அவையில் இருப்பார் என கூறப்படுகிறது. இந்த விவாதத்தின்போது அவர் சில கேள்விகளை கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com