மத்திய மந்திரி சோனோவால் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு

மத்திய மந்திரியாக இருக்கும் சர்பானந்த சோனாவால் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய மந்திரி சோனோவால் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு
Published on: 

அசாம் மாநிலத்திற்கு நாடாளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் 7 இடங்கள் உள்ளன. அசாம் சட்டசபை சபாநாயகராக பிஸ்வாஜித் திமோரி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் ஒரு இடம் காலியானது. மத்திய மந்திரியாக இருக்கும் சர்பானந்த சோனாவால், அந்த இடத்திற்கு போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள், தங்களுக்கு போதிய பலம் இல்லாததால் போட்டி வேட்பாளரை நிறுத்தவில்லை. எனவே சோனோவால் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் நாடாளுமன்ற மேல்சபையில் அசாம் பா.ஜ.க.வின் பலம் 3 எம்.பி. ஆக உயர்ந்துள்ளது. அதன் கூட்டணியில் உள்ள அசாம் கணபரிஷத் ஒரு உறுப்பினரை கொண்டுள்ளது. காங்கிரஸ் 2 எம்.பி.களையும், ஒரு சுயேச்சை எம்.பி.யும் உள்ளனர்.வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் சோனோவாலுக்கு வழங்கப்பட்டது.

சோனோவால் கடந்த ஜூலை மாதம், மாற்றி அமைக்கப்பட்ட மத்திய மந்திரி சபையில், துறைமுகம்- ஏற்றுமதி மற்றும் ஆயுஷ் துறை மந்திரியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனோவால் மஜுலி தொகுதியில் இருந்து தொடர்ந்து 2-வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதையடுத்து அவரது எம்.எல்.ஏ. இடம் காலியாகும். இதனால் அசாம் சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 60-ல் இருந்து 59 ஆக குறையும். மேலும் தற்போது 5 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com