உ.பி.: பா.ஜ.க. வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி

பா.ஜ.க. வேட்பாளர் கரண் சிங்கின் பாதுகாப்புக்கு சென்ற வாகனம் மோதி, பைக்கில் பயணம் செய்த ரேகான் கான் (வயது 17) மற்றும் ஷெஷாத் கான் (வயது 20) ஆகிய இருவரும் பலியானார்கள்.
உ.பி.: பா.ஜ.க. வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி
Published on

கோண்டா,

உத்தர பிரதேசத்தில் கைசர்கஞ்ச் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் கரண் பூஷண் சிங். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் ஆவார். இந்த தொகுதியின் எம்.பி.யாக பிரிஜ் பூஷண் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கரண் சிங்கின் பாதுகாப்புக்கு சென்ற வாகனம் ஒன்று பள்ளி ஒன்றின் அருகே, திடீரென பைக்கில் சென்றவர்கள் மீது இன்று மோதியது. இந்த விபத்தில், பைக்கில் பயணம் செய்த ரேகான் கான் (வயது 17) மற்றும் ஷெஷாத் கான் (வயது 20) ஆகிய இருவரும் பலியானார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பாதுகாப்புக்கான, அந்த சொகுசு ரக கார் சாலையோரம் நடந்து சென்ற சீதாதேவி (வயது 60) என்பவர் மீதும் மோதியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார். அவர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த பகுதியில் பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com