உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

விபத்தில் 26 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி
Published on: 

டேராடூன்,

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து கர்னபிரயாக் நகருக்கு இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

பஸ் விபத்து - 8 பேர் பலி

இந்நிலையில், ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் தெக்ரி கர்வால் மாவட்டம் குலார் பஜார் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாடை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X