எருமை மாடுகளை தொடர்ந்து பசு மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரெயில் மீண்டும் சேதம்

இன்று வந்தே பாரத் ரெயில் பசு மாடு மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது.
எருமை மாடுகளை தொடர்ந்து பசு மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரெயில் மீண்டும் சேதம்
Published on

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வத்வா ரெயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது இந்த ரெயில் மீது காட்டெருமை கூட்டம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ரெயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. பலத்த சேதமடைந்த முன்பகுதிக்கு பதிலாக மும்பையிலிருந்து வேறு ஒருபகுதி வரவழைக்கப்பட்டு இன்று மாற்றப்பட்டது. சேதம் சரிசெய்யப்பட்ட பின் இன்று மீண்டும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் வந்தே பாரத் ரெயில் கால்நடை மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது. நேற்று காட்டெருமை கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் இன்று பசு மாடு ஒன்றின் மீது ரெயில் மோதியுள்ளது. இதனால் ரெயிலின் முன் பகுதியில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் 2-வது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கால்நடைகள் மீது மோதியுள்ளது.

நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு பின், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மேற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது. இதை தொடர்ந்து சில மணி நேரங்களில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com