

மும்பை,
மும்பையில் கடந்த சில நாட்களாக விடிய விடிய பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதற்கிடையே, மும்பை காஞ்சூர் மார்க் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் வெள்ள நீரில் முற்றிலுமாக மூழ்கின. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தாமதமாக இயக்கப்பட்டன.
இந்நிலையில், அங்கு தண்டவாளங்களை வெள்ள நீர் முழுமையாக மூழ்கடித்த நிலையிலும், இந்தியாவின் அதிவேக ரெயிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் சற்றும் வேகம் குறையாமல், தேங்கியிருந்த தண்ணீரை இருபுறமும் கிழித்துக் கொண்டு முன்னேறி சென்றது. ரெயில் வெள்ள நீரை கிழித்துக்கொண்டு செல்லும்போது, தண்டவாளத்தின் இருபுறமும் தண்ணீர் பீறிட்டு மேலே எழும்பியது.
அந்த தண்ணீர் பல அடி உயரத்தில் மேலே இருந்த மேம்ப லம் வரை சென்று சிதறியது. இந்த பிரமிக்க வைக்கும் காட் சியை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பினர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், 'பருவமழை காலங்களில் மும்பையின் அசைக்க முடியாத கம்பீரத்திற்கு இந்த வந்தே பாரத் ரெயில்தான் மிகச்சிறந்த அடையாளம்' என பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.