

சுல்தான்பூர்,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா தலைவராக இருந்தார். அந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அமித்ஷா பற்றி பேசினார்.
அவர் அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை பேசியதாக பா.ஜனதா பிரமுகர் விஜய் மிஸ்ரா, ராகுல்காந்திக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிந்த நிலையில், இவ்வழக்கில் 26-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூடுதல் சிவில் நீதிபதி சுபம் வர்மா நேற்று அறிவித்தார். அன்றைய தினம் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருக்கும் என்று மனுதாரரின் வக்கீல் தெரிவித்தார்.