2 நாள் பயணமாக கேரளா சென்றடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

2 நாள் பயணமாக கேரளா சென்றடைந்த துணை ஜனாதிபதியை அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார்.
2 நாள் பயணமாக கேரளா சென்றடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
Published on

திருவனந்தபுரம்,

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் அவருடைய மனைவி சுதேஷ் தன்கர் இருவரும் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைந்த துணை ஜனாதிபதியை கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த பயணத்தின், முதல் நாளான இன்று அவர் இந்திய விண்வெளி மையம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் (ஐ.ஐ.எஸ்.டி.) 12-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், அவர் சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.

இதன்பின்பு, அடுத்த நாள் கொல்லம் மற்றும் அஷ்டமுடி பகுதிகளுக்கு துணை ஜனாதிபதி தன்கர் செல்கிறார். இதனை துணை ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com