துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கேரளத்திற்கு இன்று பயணம்

அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கேரளத்திற்கு இன்று பயணம்
Published on: 

புதுடெல்லி

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கேரளத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கேரளத்திற்கு இன்று ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். இதுபற்றி துணை ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட செய்தியில், மாதா அமிர்தானந்தமயியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, கேரளத்தின் கொல்லம் நகரில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் நடைபெறும் விஸ்வ சேவா தின விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளது.

பட்டமளிப்பு விழா

அதனுடன் வருடாந்திர கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு மனிதாபிமான நிகழ்ச்சிகளும் அப்போது இடம்பெறும். இதேபோன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உத்ராடம் திருநாள் மருத்துவ அறிவியல் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் அவர் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

இதற்கு முன் அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com