ஏரியில் கரைக்காமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை: காரணம் என்ன.?

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தேவையான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரியில் கரைக்காமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை: காரணம் என்ன.?
Published on

திருமலை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் பக்தர்கள், இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3 நாட்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். சோமலா பகுதியில் வறட்சியான காலநிலை நிலவி வருவதால் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தேவையான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சோமலா ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன சோமலா கிராமத் தில் பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஒன்றை அருகிலுள்ள போஜ்ஜ மல்லையா ஏரியில் கரைக்க கொண்டு வந்தபோது, அந்த ஏரி வறண்டதால் தண்ணீர் இல்லாமல் விநாயகர் சிலையை ஏரியின் நடுவே பக்தர்கள் வைத்து சென்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com