மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மோதலில் 3 பேர் காயம் - பாதுகாப்புப் படையினர் குவிப்பு

பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் 3-ந் தேதி கலவரம் வெடித்தது. 11 மாதங்களை கடந்த பிறகும் இந்த கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் டெங்நவுபால் மாவட்டத்தில் உள்ள பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் மெய்தி இனத்தை சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து மெய்தி இன பெண்கள் அங்கு பேரணி நடத்தினர். இதனால் அப்பகுதியில் கூடுதல் படைகள் குவித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹெய்ரோக் மற்றும் டெங்நவுபால் ஆகிய மாவட்டங்களில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று மாலையில் இருந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com