இணையத்தை உலுக்கும் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற இணையதள பக்கத்திற்கு மத்திய அரசு தடை

தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காக்ரோச் ஜனதா பார்ட்டி தொடங்கப்பட்டது.
இணையத்தை உலுக்கும்  'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற இணையதள பக்கத்திற்கு மத்திய அரசு தடை
Published on

புதுடெல்லி,

சமூக ஊடகங்களில் இயங்கும் வேலையற்ற இளைஞர்களை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த், கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சித்திருந்தார்

நீதிபதியின் விமர்சனத்திற்கு பதிலடியாக 30 வயது இளைஞர் அபிஜீத் திப்கே என்பவர் தொடங்கிய இணைய தள பக்கம்தான் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி). இது தொடங்கப்பட்ட வெறும் நான்கு நாட்களிலேயே, 1 கோடிக்கும் அதிகமான பாலோயர்ஸ்களை தன் பக்கம் இழுத்துள்ளது.

இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற காக்ரோச் ஜனதா பார்ட்டி (cockroach janata party) இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டுவிட்டர்) என சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று இயங்கிவந்தநிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டியின் (cockroach janata party) எக்ஸ் (டுவிட்டர்) தள பக்கத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காக்ரோச் ஜனதா பார்ட்டி (கரப்பான் பூச்சி ஜனதா) இன்ஸ்டா பக்கத்தில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி வந்தது. இந்நிலையில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (cockroach janata party)யின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டு, கணக்கும் நீக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (cockroach janata party) நிறுவன தலைவர் அபிஜித் தீப்கே cockroach is back எனும் புதிய எக்ஸ் கணக்கை தொடங்கி உள்ளார்.

காக்ரோச் ஜனதா பார்ட்டியின் எக்ஸ் வலைதளம் முடக்கப்பட்டதற்கு பா.ஜ.க. அரசே காரணம் என CJP (cockroach janata party) குறை கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com