விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர் அட்டை - புதிய வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்


விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர் அட்டை - புதிய வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
x

வாக்காளர் அட்டையை 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

புதுடெல்லி,

புதிய வாக்காளர் அட்டையை வாக்காளர்களிடம் 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது, புதிய அட்டையை வினியோகிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதிதாக பதிவு செய்தாலோ அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் தங்கள் விவரங்களை திருத்தம் செய்தாலோ அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை வினியோகிக்கப்படும்.

இதற்காக தனது புதிய இணையதளத்தில் தகவல் தொழில்நுட்ப செயலி ஒன்றை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. வாக்காளர் அட்டை உருவாக்கப்பட்டதில் இருந்து தபால்துறை மூலம் வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்படும் வரையிலான ஒவ்வொரு கட்டம் குறித்தும் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.




1 More update

Next Story