சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்: 2 நாட்கள் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய விரும்பும் பொதுமக்கள் சிறப்பு முகாம்களை அணுகிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்: 2 நாட்கள் நடைபெறுகிறது
Published on: 

சென்னை,

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 22-ந்தேதி(நாளை) மற்றும் 29-ந்தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

சிறப்பு முகாம்கள்

“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (21.11.2026 ) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்துவாக்குச் சாவடிகளிலும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, நாளை 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

எனவே, வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள், புதிதாகப் பதிவு செய்யவுள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய விரும்பும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களை அணுகிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X