டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன.

மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியைக் கைப்பற்றியிருந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த வாக்குப்பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com