பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
Published on

புதுடெல்லி,

சீக்கிய மதத்தை தோற்று வித்தவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தா. அவரது நினைவாக, அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேந்த நூற்றுக்கும் மேற்பட்டோ, அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகாகள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சீக்கிய மதத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். சீக்கியாகள் மீது தாக்குதல் நடத்தி, சீக்கிய குருத்வாராவை அவமதித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விஷயத்தில் தலையிட்டு, சீக்கிய யாத்ரீகர்களை தாக்குதல் நடத்தும் கும்பலிடம் இருந்து உடனடியாக மீட்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் டுவிட்டரில் கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com