

புதுடெல்லி,
பஞ்சாப்பின் சங்ருர் மாவட்டத்தை சேர்ந்த குல் சார் சிங் என்பவர், கடந்த 6-ந்தேதி நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மாநில நிதி மந்திரி ஹர்பால் சீமாவை சந்தித்து போதைப்பொருள் சகஜமாக கிடைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து மறுநாள் அவர் தற்கொலை செய்து கொண்டார். மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பகவந்த் சிங் மன் அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். குல்சார் சிங் மரணம் தொடர்பாக மந்திரி ஹர்பால் சீமாவை உடனடியாக பதவி நீக்கம் செய்து, நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி உள்ளார்.
அரசின் தோல்விகளை கேள்வி எழுப்பி னால் சித்ரவதையும், அச்சுறுத்தலும் செய்யப்படுவார்கள் என்ற அபாயகர மான போக்கு பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில் நிலவி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.