டெல்லியில் நாளை முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும்; முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் நாளை முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
டெல்லியில் நாளை முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும்; முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் நேற்று 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14,36,695 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 25,066 ஆகவும் உள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,11,064 ஆக உள்ளது.

டெல்லியில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, நாளை முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வாரச்சந்தைகள் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும். அவர்கள் ஏழை மக்கள். அவர்களது வாழ்வை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

எனினும், ஒவ்வொருவரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை மிக முக்கியம். அதனால், ஒவ்வொருவரும் இந்த வாரச்சந்தைகள் திறக்கப்பட்ட பின்னர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com