மேற்கு வங்காளம்: கனமழைக்கு 2 பேர் பலி

நாகாலாந்தில், தொடர் மழை காரணமாக தன்சிரி, கிலாதாரி, மக்ராங் மற்றும் கலியா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேற்கு வங்காளம்: கனமழைக்கு 2 பேர் பலி
Published on

கொல்கத்தா,

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 பேர் பலியாகினர்.

கட்டல் துணைப்பிரிவு அதிகாரி சுமன் பிஸ்வாஸின் கூறுகையில், கட்டல் தொகுதி மற்றும் நகராட்சியின் பல இடங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.ஆனால் சந்திரகோனா, பாக்கா பாயிண்ட் மற்றும் கேதா ஆறு ஆகிய இடங்களில் நீர்மட்டம் இப்போது குறைந்து வருகிறது. சந்திரகோனாவின் நிலைமை சீரானது. ஆனால் கட்டலில், நிலைமை மோசமடைந்து வருகிறது.மருத்துவக் குழுக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் மீட்புக் குழு தற்போது செயல்பாட்டில் உள்ளது.

கிஷ்வாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணவில்லை. நாங்கள் அவரைத் தேடி வருகிறோம். இந்த வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகினர். கட்டல் தொகுதியில் உள்ள கோடி போனார்பூரைச் சேர்ந்த 7 வயது பள்ளி மாணவி சுல்தானா பலியானார். மேலும் ஒருவரைக் காணவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com