

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மெதினிபூர் மாவட்டம் நந்திகிராம் சட்டசபை தொகுதியிலும், முர்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி வெற்றி பெற்ற 2 தொகுதிகளில், ராஜினாமா செய்த தொகுதி நந்திகிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவரது முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹாசி ராணிரத், பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டனர். மம்தா பானர்ஜி அணியின் வேட்பாளர், போட்டியில் இருந்து விலகியதால், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
அசாம் மாநிலம் நகோன் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரத்யுத் போர்டோலாய் வெற்றி பெற்றிருந்தார். நடப்பாண்டின் தொடக்கத்தில், அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால், காலியாக உள்ள நகோன் மக்களவை தொகுதியில் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவாஷிஸ் சர்மா, காங்கிரஸ் வேட்பாளராக சிபமோனி போரா, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருத்தின் அஜ்மல் ஆகியோர் உள்பட 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இரண்டு மாநில இடைத்தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகலுக்குள் வெற்றி பெறப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.