மேற்கு வங்காளம்: பால்டா தொகுதி மறுதேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி

அக்கட்சியின் மொத்த வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்து உள்ளது.

மேற்கு வங்காளம்:  பால்டா தொகுதி மறுதேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி
Published on

பால்டா

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில், 2-வது கட்ட தேர்தலின்போது, மேற்கு வங்காளத்தில் பால்டா தொகுதியில் முறைகேடுகள் நடந்தன என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.

இதில், பா.ஜ.க. வேட்பாளர் தேபாங்சு பண்டா 1 லட்சத்து 9 ஆயிரத்து 21 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ஐ. (எம்) வேட்பாளர் சம்பு நாத் குர்மியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால், அக்கட்சியின் மொத்த வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்து உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜகாங்கீர் கான் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com