

பீர்பும்
மேற்கு வங்காள மாநிலம் பீர்பும் மாவட்டத்தில் சைந்தியா ரெயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் மற்றும் அரசு ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் உடனே சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு சம்பவம் தொடர்ச்சியாக, அந்த வழியேயான ரெயில் போக்குவரத்து தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது.