மேற்கு வங்காளம்: மின்னல் தாக்கி 4 பேர் பலி

மின்னல் தாக்கி 2 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்காளம்: மின்னல் தாக்கி 4 பேர் பலி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

4 பேர் பலி

இந்நிலையில், மழையில் போது பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியது. அம்மாநிலத்தின் ஹவுரா மாவட்டம் ஜகத்பல்வபூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 4 பேரும் உயிரிழந்தனர். மேலும், மின்னல் தாக்கி 2 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com