என்னது.. 1¼ கிலோ மீன் விலை ரூ.15 ஆயிரமா: அப்படி என்னதான் இருக்கு?

புதுச்சேரியில் இருந்து விசைப்படகில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் வலையில் ஆந்திர மக்களால் மீன்களின் ராஜா என்று அழைக்கப்படும் புலாசா மீன் ஒன்று சிக்கியது.
மீன்களின் ராஜா என்று அழைக்கப்படும் புலாசா மீன்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் இருந்து விசைப்படகில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் வலையில் சிக்கிய 1¼ கிலோ எடையுள்ள ஆந்திரா மக்களால் மீன்களின் ராஜா என்று அழைக்கப்படும் புலாசா மீன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்

புதுச்சேரியில் இருந்து விசைப்படகில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் வலையில் 1¼ கிலோ எடையில் அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. புலாசா என்ற பெயர் கொண்ட அந்த மீனை கரைக்கு கொண்டு வந்ததும், பெண் ஒருவர் ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.

1¼ கிலோ எடையுள்ள ஒரு மீன்

பொதுவாக, 100 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை இவ்வாறு அதிக தொகை கொடுத்து வாங்குவதை பார்த்திருக்கிறோம். அதுவும் 1¼ கிலோ எடை கொண்ட புலாசா மீனை இவ்வளவு விலை கொடுத்து வாங்க என்னதான் காரணம் என்று விவரத்தை தேடினோம்.

மீன்களின் ராஜா புலாசா மீன்

ஆந்திர மக்களால் மீன்களின் ராஜா என புலாசா மீன் அழைக்கப்படுகிறது. அதிக சுவையும், அதிக சத்தும் கொண்ட இந்த மீன், எப்போதாவதுதான் வலையில் சிக்குமாம். எப்போதெல்லாம் இந்த மீன் பிடிபடுகிறதோ, அப்போதெல்லாம் அதன் எடையை பொருத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போகுமாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com