

புதுடெல்லி,
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28-ந் தேதி கால வரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், டெல்லி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மத்திய அரசுக்கு சொந்தமான டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, 'மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அவரது உடல்நிலம் சீரடைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்ற பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில், சோனம் வாங்சுக் 26 நாட்களுக்கு பிறகு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார். மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்தக் கொண்டார்.
உண்ணாவிரத்தை முடிப்பதற்கான நிபந்தனைகளை மிக விரைவில் ஒரு தனி காணொளியில் விரிவாக விளக்குவேன். இதற்கிடையில், எங்கும் எந்த விதமான வன்முறையையும் அனுமதிக்காமல் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வான்சுக் தெரிவித்தார்.
இந்த நிலையில், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட கல்வியாளர் சோனம் வாங்சுக்கிடம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கொடுத்த வாக்குறுதிகள் வெளியாகியுள்ளன. அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியாகப் போராடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது.
நீட் வினாத்தாள் கசிவு, கல்வி முறை சீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு ஒத்துழைக்கும். நீட் வினாத்தாள் கசிவால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன்.