

ஆண்டிராய்டு மொபைல் போன்களின் 2.18.380 வெர்சனை பயன்படுத்துவோர், யூடியூப் வீடியோக்கள், முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை தனியாக ஒரு பக்கம் பயன்படுத்தி கொண்டே வாட்ஸ்அப் சாட்டிங்கில் ஈடுபடலாம்.
பிக்சர் இன் பிக்சர் என்ற இந்த புதிய வசதியானது தனிநபருடன் சாட்டிங் மற்றும் குழு சாட்டிங் ஆகியவற்றிலும் பணியாற்ற கூடியது. ஆண்டிராய்டு மொபைல் போன்களின் 2.18.380 வெர்சனை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் இனி இந்த வசதி கிடைக்கும். இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஐபோனில் இந்த வசதி உள்ளது.