நீட் மோசடி குறித்து பிரதமர் மோடி எப்போது வாய் திறப்பார்? காங்கிரஸ் கேள்வி!

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, நீட் தேர்வு குளறுபடிகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை விமர்சித்துள்ளார். 'பிரதமர் எப்போது விவாதிப்பார்?' என அவர் கேள்வி எழுப்பினார்.
நீட் மோசடி குறித்து பிரதமர் மோடி எப்போது வாய் திறப்பார்? காங்கிரஸ் கேள்வி!
Published on

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்த புகாரை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூலை 21 அன்று மறுதேர்வு நடைபெறும்; இனி நீட் கணினி வழியில் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதுகுறித்து பிரியங்க் கார்கே கூறுகையில், "இது ஒரு மாபெரும் துயரம். இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெறவில்லை. இது திட்டமிட்டு செய்யப்பட்டது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஏன் இன்னும் ஒருவர்கூட ராஜிநாமா செய்யவில்லை? 22 லட்சம் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு யார் பொறுப்பு?" என்றார்.

மேலும் அவர், "என் நண்பர்களின் குழந்தைகள் உள்பட பல மாணவர்கள், மீண்டும் தேர்வை எழுத மாட்டோம் என்று கூறுகிறார்கள். இரண்டு, மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நீட் பயிற்சி எடுத்து, இரவும் பகலும் படித்துவிட்டு தேர்வெழுதினால், அவர்கள் பணத்திற்காகக் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு விற்கிறார்கள்," எனக் கண்டனம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி, "மோடி எங்கே? தன்னை 'ஜென் ஸி' தலைமுறை என்று கூறிக்கொண்டும், 'நான் அவர்களுக்காக இருக்கிறேன்' என்றும் சொல்கிறார். அவர் எப்போது நீட் தேர்வு குறித்து விவாதிப்பார்?" என்றும் பிரியங்க் கார்கே சவால் விடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com