மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி எப்போது முடியும்? - வெளியானது முக்கிய தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி எப்போது முடியும்? - வெளியானது முக்கிய தகவல்
Published on

புதுடெல்லி,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை, கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவு பெறும், திருத்தி அமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டில் கூடுதலாக 700 கோடி ரூபாய் அதிகரித்தது ஏன் என்று, திமுக எம்.பி. வில்சன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் கட்டுமானம் உட்பட முன் முதலீட்டு பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முக்கிய பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த ஏலதாரர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த ஜிகா அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கடன் ஒப்பந்தத்தின்படி, வரும் 2026-ஆம் ஆண்டு அக்டேபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் கட்டுமான பரப்பளவு அதிகரிப்பு போன்ற பணிகளால், திட்ட மதிப்பீட்டிற்கான செலவு 1,264 கோடி ரூபாயில் இருந்து 1,977 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com