நாடு திரும்பினால் மட்டுமே விஜய் மல்லையா மனு விசாரிக்கப்படும்: மும்பை ஐகோர்ட்டு அதிரடி

தன்னை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார்
நாடு திரும்பினால் மட்டுமே விஜய் மல்லையா மனு விசாரிக்கப்படும்: மும்பை ஐகோர்ட்டு அதிரடி
Published on

மும்பை,

ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கை தொடர்ந்து, பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். வெளிநாட்டில் உள்ள அவரை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்தது. இதை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். மேலும் 2018-ம் ஆண்டு சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Also Read
இரண்டு அணிகளிடமும் உதைபடும் கால்பந்து போல் ஆகிவிட்டேன்: விஜய் மல்லையா சொல்கிறார்
நாடு திரும்பினால் மட்டுமே விஜய் மல்லையா மனு விசாரிக்கப்படும்: மும்பை ஐகோர்ட்டு அதிரடி

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அன்காட் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, விஜய் மல்லையா இந்திய நீதிமன்ற வரம்புக்குள் வந்தால் மட்டுமே அவரது மனுவை விசாரிக்க முடியும் என நீதிபதிகள் கூறி விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

Also Read
அனில் அம்பானி மீது 3 வங்கிகள் எடுத்த நடவடிக்கைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை
நாடு திரும்பினால் மட்டுமே விஜய் மல்லையா மனு விசாரிக்கப்படும்: மும்பை ஐகோர்ட்டு அதிரடி

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள் மீண்டும் அதையே உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அன்காட் கூறியதாவது: “விஜய் மல்லையா கண்டிப்பாக நாடு திரும்ப வேண்டும். அவர் நாடு திரும்பாவிட்டால் இந்த மனுவை விசாரிக்க மாட்டோம். நீங்கள் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்கிறீர்கள். வேண்டுமென்றே நீதிமன்ற விசாரணையை புறக்கணித்து விட்டு நிவாரணம் கோர முடியாது. இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். விஜய் மல்லையா இந்தியாவுக்கு வருகிறாரா? இல்லையா? என்பது குறித்து தெளிவாக எங்களிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.”இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com