செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..? - சுப்ரீம்கோர்ட்டில் நாளை தீர்ப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்க இருப்பதாக சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஓராண்டாக சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம்கோர்ட்டு அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்த சூழலில் இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்து தீர்ப்பைத் தள்ளி வைத்தது சுப்ரீம்கோர்ட்டு.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்க இருப்பதாக சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com