

புதுடெல்லி,
அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். மேகதாது அணை பிரச்சினையை எழுப்பி கோஷமிட்டனர். அதுபோல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள், பசுவதைக்கு எதிரான கும்பலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட பிரச்சினையை எழுப்பினர்.
உறுப்பினர்கள் பேசுவது அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபைத்தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தார். அதன் பிறகும் அமளி நீடித்ததால், சபையை அவர் நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். இதனால், எந்த அலுவலும் நடைபெறவில்லை.