கள்ளக்காதலன் தற்கொலை செய்துகொண்ட சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்காதலன் தற்கொலை செய்துகொண்ட சோகத்தால் இளம்பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கள்ளக்காதலன் தற்கொலை செய்துகொண்ட சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

டெல்லி,

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு (வயது 30). இவர் டெல்லியில் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அதேவேளை, குருகிராமிலுள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவருபவர் பாபுலால். திருமணமான பாபுலாலுக்கும் இளம்பெண் மஞ்சுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாபுலால் தான் வைத்திருந்த சட்டவிரோத நாட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தனது கள்ளக்காதலன் பாபுலால் தற்கொலை செய்துகொண்ட செய்தி மஞ்சுவுக்கு தெரிவியவந்துள்ளது. கள்ளக்காதலன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சு அன்று இரவு (ஞாயிற்றுகிழமை) தனது வீட்டில் உடல் முழுவதும் மண்ணென்னை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ வைத்ததில் அலறி துடித்த மஞ்சுவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலன் தற்கொலை செய்துகொண்ட சோகத்தால் இளம்பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com