

புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், ஐதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். இருவரும் இணையதளம் (டேட்டிங் ஆப்) மூலம் பழகி வந்துள்ளனர். கடந்த மாதம் 30-ந் தேதி, அந்த வாலிபர் டெல்லிக்கு சென்று இளம்பெண்ணை நேரில் சந்தித்தார். பிறகு அப்பெண்ணை அழைத்துக்கொண்டு டெல்லியில் துவாரகா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு இளம்பெண்ணை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு ஐதராபாத் திரும்பிய அவர், இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்க தொடங்கினார். இதுகுறித்து டெல்லி போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகிறார்கள்.