பயிற்சி அக்னி வீராங்கனை தற்கொலை... காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் விபரீத முடிவு

விபத்து மரணம் என மல்வானி பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயிற்சி அக்னி வீராங்கனை தற்கொலை... காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் விபரீத முடிவு
Published on

மும்பை,

கேரளாவை சேர்ந்த 20 வயது பெண் அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். தேர்வு செய்யப்பட்ட அவர், கடற்படை பயிற்சி மேற்கொள்வதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு மும்பைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அந்த பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது காதலன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.

இதையடுத்து பயந்துபோன அந்த பெண் சிறிது நேரத்திற்கு பிறகு மலாட் மேற்கில் ஐஎன்எஸ் ஹம்லா தளத்தில் உள்ள அவரது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். அந்த அறையில் இருந்து பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் விபத்து மரணம் என மல்வானி பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com