40 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்த பெண் மரணம்: உருக்கமான பதிவு வைரல்

நிதித்துறை வல்லுநர் கிஷோர் சுப்பிரமணியன் "அம்மாவுக்கு பிரியாவிடை சொல்லக் கூட ஒரு குரல் இல்லை" என்ற உருக்கமான தலைப்புடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
40 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்த பெண் மரணம்:  உருக்கமான பதிவு வைரல்
உருக்கமான பதிவு
Published on: 

மும்பை,

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட முதிய பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகள்களைத் தேடி அக்கம்பக்கத்தினர் வெளியிட்டுள்ள செய்தித்தாள் அறிவிப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனிமையில் கழிந்த 40 ஆண்டுகள்

சென்னையைச் சேர்ந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி என்பவர், மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த 40 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ள போதிலும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற முகவரியோ அல்லது தொடர்பு விவரங்களோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

இறுதிச் சடங்கு செய்த அக்கம்பக்கத்தினர்

இந்த நிலையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி லலிதா கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது ரத்த சொந்தங்கள் யாரும் உடனில்லாத நிலையில், அவருக்கு உறவினரான ஒரு தம்பதியும், அவர் வசித்த கட்டிடத்தின் அக்கம்பக்கத்தினரும் ஒன்றிணைந்து இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர்.

செய்தித்தாள் அறிவிப்பு

மறைந்த லலிதா கிருஷ்ணமூர்த்தியின் மகள்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு இத்தகவலைத் தெரிவிக்கும் நோக்கில், உஷா லட்சுமிநாராயணன் மற்றும் பவன் ஷெட்டி ஆகியோரின் தொடர்பு எண்களுடன் செய்தித்தாளில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

வைரலான பதிவு

இந்த அறிவிப்பைப் பார்த்த நிதித்துறை வல்லுநர் கிஷோர் சுப்பிரமணியன் என்பவர், பவன் ஷெட்டியைத் தொடர்பு கொண்டு பேசிய பிறகு, "அம்மாவுக்கு பிரியாவிடை சொல்லக் கூட ஒரு குரல் இல்லை" என்ற உருக்கமான தலைப்புடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவம் முதியோர் பராமரிப்பு மற்றும் தனிமை குறித்த விவாதத்தை இணையத்தில் ஏற்படுத்தியுள்ளது.

X