

சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் பதேகர் சாகிப் மாவட்டம் கலான் கிராமத்தில் நடை பெற்ற மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூட்டத்தில் முதல்-மந்திரி பக வந்த் மான் பேசியதாவது:-
பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி பெண் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். பட்டியல் சாதியினர் பெண்களுக்கு ரூ.1,500 அளிக்கப்படும். பயனாளிகள் 3 மாதங்களுக்கான தொகையை முதல் தவணையாக பெறுவார்கள். இதன் மூலம், ஜூலை 1-ந் தேதி அன்று பட்டியல் சாதி பெண்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம், பொதுப்பிரிவு பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் அவர்களது வங்கிக்க ணக்குகளில் செலுத்தப்படும்.
இதுகுறித்து அவர்களின் செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திட்டத்துக்காக பஞ்சாப் அரசு ரூ.9 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி உதவி பெண்களை பணக்காரர்களாக மாற்றாமல் இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக அவர்களுக்கு கண்ணியம், சுயமரி யாதை, தன்னம்பிக்கையை வழங்கும்.
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையின் போது எந்தவொரு உண்மையான வாக்கும் நீக்கப்படுவதை தனது அரசு அனுமதிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.