மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி; தென்மாநிலங்களுக்கோ, பெண்களுக்கோ எந்த நன்மையும் இல்லை - ஜெகன் மோகன் ரெட்டி

2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாகும் என ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி; தென்மாநிலங்களுக்கோ, பெண்களுக்கோ எந்த நன்மையும் இல்லை - ஜெகன் மோகன் ரெட்டி
Published on

அமராவதி,

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது நேற்று மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததால் தென்மாநிலங்களுக்கோ, பெண்களுக்கோ எந்த நன்மையும் இல்லை என ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் எதை சாதித்துவிட்டார்கள்? உண்மை என்னவென்றால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்தியாவிற்கான மக்களவை இடங்களின் எண்ணிக்கை குறையும். அதே சமயம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்மாநிலங்களுக்கோ, பெண்களுக்கோ எந்த நன்மையும் இல்லை. 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாகும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக தென்மாநிலங்கள் மேலும் தண்டிக்கப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com