பிரதமர் மோடிக்கு 75 வது பிறந்த நாள்: உலக தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு 75 வது பிறந்த நாள்: உலக தலைவர்கள் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத்தின் வட்நகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது 8-வது வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த பிரதமர் மோடி, பின்னர் 1985ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தனது சிறப்பான நடவடிக்கைகளால் 1998ஆம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக உயர்ந்தார்.

அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கண்டது அனைத்தும் வெற்றிகளே. 2001ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த அவர், 2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாஜக,   பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 2014 முதல் இன்று வரை தொடர்ந்து 3 முறை பிரதமராக தேர்வான பிரதமர் மோடி, இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகிக்கும் காங்கிரஸ் சாரா முதல் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடிக்கு இன்று 75-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தொழிலதிபர் பில் கேட்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், பூடான் பிரதமர் சேரிங் டோப்கே, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், மியான்மர் அதிபர் மின் ஆங் ஹ்லைங், கயானா அதிபர் இர்பான் அலி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com