உலக தண்ணீர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

நீர் நம்மை தாங்கி நிற்பதோடு மட்டுமல்லாமல் பூமியின் எதிர்காலத்தையும் வடிவமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலக தண்ணீர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
Published on

டெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி இன்று(ஞாயிற்றுக்கிழமை) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, பூமியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அத்தியாவசிய உயிர் கூறிற்கு தனது புகழஞ்சலியையும் செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

“நீர் நம்மை தாங்கி நிற்பதோடு மட்டுமல்லாமல் பூமியின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீரின் ஒவ்வொரு துளியையும் சேமித்து அதை பொறுப்பாக பயன்படுத்துவதற்கான நமது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையின்கூற்றுப்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்கு 6-ஐ நோக்கிப் பணியாற்றுவதே உலக நீர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். 2026-ஆம் ஆண்டு உலக நீர் தின பிரச்சாரமானது, நீர் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பெண்களுக்கு சமமான குரல், தலைமைத்துவம் மற்றும் வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு மாற்றத்தை உருவாக்கும், உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கிறது என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com