கப்பலில் 'ஐ லவ் பாகிஸ்தான்' எழுத்துகள் எழுதிய சம்பவம்: தேச துரோக வழக்குப்பதிவு

பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் கொச்சி கப்பல் கட்டும் தளம் உள்ளது.
கப்பலில் 'ஐ லவ் பாகிஸ்தான்' எழுத்துகள் எழுதிய சம்பவம்: தேச துரோக வழக்குப்பதிவு
Published on

கொச்சி,

கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு நாட்டிற்காக போர் கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு கொண்டு வரப்பட்டு இருந்த ஒரு கப்பலின் உள்பகுதியில் 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று ஆங்கிலத்தில் கூர்மையான பொருளைக் கொண்டு எழுத்துகள் எழுதப்பட்டு இருந்தது.

பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், இவ்வாறு எழுதப்பட்டு இருந்த சம்பவம் குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டது. இது குறித்து கப்பல் கட்டும் தள அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் தெற்கு போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வருவதற்கு முன்பே கப்பலில் அந்த எழுத்துகள் எழுதப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com