மந்திரிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்..!! - உத்தரபிரதேச முதல்-மந்திரி உத்தரவு

மந்திரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

மந்திரிகளின் சிறப்புக் கூட்டத்தை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும், தூய்மையும் மிகவும் முக்கியம். அதன் அடிப்படையில், அனைத்து மந்திரிகளும் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அதேபோல ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ். (பிராந்திய சிவில் சர்வீஸ்) அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் தமது மற்றும் தங்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் அறியும் வகையில் அவை இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

மேலும், அரசு பணிகளில் தங்கள் குடும்பத்தினர் தலையிடாது இருப்பதை அனைத்து மந்திரிகளும் உறுதிப்படுத்த வேண்டும். நாம் நமது நடத்தையால் பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அரசு திட்டங்களை குறிப்பிட்ட காலத்திலும், தரமாகவும் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு மந்திரிகள் வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com